கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் ஹம்ஸா ஸைனுடின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் நீடிப்பது முறையல்ல – டத்தோ துன் பைசால்
- Surendran Sumdraraj
- 16 Mar, 2026
சிரம்பான், மார்ச் 16-
பெர்சத்து கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்ஸா ஸைனுடின், கட்சியில் இருந்து நீக்கப்பட்டப் பிறகும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் நீடிப்பது முறையல்ல என்று பெர்சத்து கட்சியின் தகவல் பிரிவு தலைவர் டத்தோ துன் பைசால் இஸ்மாயில் அசீஸ் தெரிவித்துள்ளார்.
ஹம்ஸா ஸைனுடின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றது, அவர் பெர்சாத்து கட்சியின் பொதுச் செயலாளராகவும், பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினராகவும், பெரிகாத்தான் நேஷனல் (PN) எதிர்க்கட்சித் தொகுதியின் பிரதிநிதியாகவும் இருந்ததன் அடிப்படையில்தான் என அவர் கூறினார்.
ஆனால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டப் பிறகு, அந்தப் பதவியில் தொடர்ந்து இருப்பது முறையற்றது என்றும் துன் பைசால் விமர்சித்தார்.
“ஒருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இனி அந்தக் கட்சியின் உறுப்பினராக இல்லாதபோது, அவரிடம் மரியாதை மற்றும் வெட்கம் இருந்தால் அந்தப் பதவியில் தொடர்வது பொருத்தமற்றதாகும்,” என்று அவர் கூறினார்.
தற்போது ஹம்ஸா ஸைனுடின் நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தாத சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக மட்டுமே உள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கட்சியின் ஆதரவின் மூலம் கிடைத்த முக்கியமான அரசியல் பதவிகளை, சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வகிப்பது கொள்கை ரீதியாக சரியானதல்ல என்றும் துன் பைசால் இஸ்மாயில் அசீஸ் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



