வெள்ளத் தடுப்புவிவகாரம்: SPRM உடன் அவசர விளக்கக் கூட்டம் - ஹன்னா இயோ

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 18-

கோலாலம்பூர் நகரில் உள்ள வெள்ளத் தடுப்பு நீர்தேக்கக் குளங்கள் தொடர்பான சர்ச்சை குறித்து, Suruhanjaya Pencegahan Rasuah Malaysia (SPRM) உடன் விரிவான விளக்கக் கூட்டம் இந்த வாரத்தில் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் துறை (கூட்டரசு பிரதேசம்) அமைச்சரான Hannah Yeoh தெரிவித்ததாவது, வெள்ளத் தடுப்பு குளங்களின் பரப்பளவு அதன் அசல் அளவிலிருந்து சுமார் 30 சதவீதம் மட்டுமே மீதமுள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பாக SPRM விசாரணை மேற்கொண்டுள்ளது என்று கூறினார்.

“SPRM விசாரணை முடிவுகள் குறித்து முழுமையான விளக்கத்தை பெற நாங்கள் தொடர்புகொண்டுள்ளோம். இந்த வாரமே அந்த கூட்டத்தை நடத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன,” என அவர் தெரிவித்தார்.

இந்த விளக்கக் கூட்டத்தில் Jabatan Wilayah Persekutuan அதிகாரிகள், சிறப்பு Task Force உறுப்பினர்கள், Fadlun Mak Ujud, கூட்டரசு பிரதேச துறை தலைமை இயக்குநர் Muhammad Azmi Mohd Zain மற்றும் நிலம் மற்றும் சுரங்க அலுவலக அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *