உணவகத்தில் கைகலப்பு! இளம்பெண் உட்பட 13 பேர் கைது!
- Thinagaren Sanggaren
- 29 Dec, 2025
டிசம்பர் 29,
உணவகத்தின் வாசலில் ஆடவர் ஒருவரைக் கும்பலொன்று கொடூரமாகத் தாக்கும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதைத் தொடர்ந்து கைகலப்பில் ஈடுபட்டதாக நம்பப்படும் வியட்னாமிய பெண் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Kamarul Zaman Mamat தெரிவித்தார். இச்சம்பவம் ஜொகூர் பாரு Taman Mount Austin பகுதியில் உள்ள உணவகத்தில் அதிகாலை 3.50 மணிக்கு நிகழ்ந்ததாகத் தெரிய வந்துள்ளது. இரு தனிநபர்களுக்கிடையிலான பணப்பரிவர்த்தனையில் ஏற்பட்ட முரண்களால் இந்த கைகலப்பு நிகழ்ந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Kamarul Zaman Mamat தெரிவித்தார்.
27 வயது நபர் தனது நண்பரின் வங்கியிலிருந்து RM100,000 ரிங்கிட்டைச் செலவு செய்ததால் கோபமடைந்த நண்பர் 27 வயது நபரைத் தாக்கியதாக நம்பப்படுகிறது. கைது செய்யப்பட்ட அனைவரும் 20 முதல் 40 வயதுக்குற்பட்டவர்கள் என்றும், அவர்களிடமிருந்து சிறு கத்தி உட்பட கூர்மையான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Kamarul Zaman Mamat தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 12 ஆண்களும் 7 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு வியட்னாமிய பெண் 3 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Kamarul Zaman Mamat தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



