2029க்குள் முழுமையான டிஜிட்டல் சுகாதார சேவை: சுகாதார அமைச்சு இலக்கு
- Surendran Sumdraraj
- 12 May, 2026
கோலாலம்பூர், மே 12-
அரசு சுகாதார நிலையங்களில் நிலவி வரும் அதிகப்படியான ஆவணப்பணி மற்றும் நிர்வாக சிக்கல்களைக் குறைக்கும் நோக்கில், 2029ஆம் ஆண்டுக்குள் அனைத்து பொது சுகாதார வசதிகளையும் முழுமையாக டிஜிட்டல் முறைக்கு மாற்ற சுகாதார அமைச்சு (KKM) இலக்கு நிர்ணயித்துள்ளது.
சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Dzulkefly Ahmad வெளியிட்ட அறிக்கையில், சுகாதார பணியாளர்கள் எதிர்கொள்ளும் அதிக பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் உண்மையான பிரச்சினைகள் என்பதை அமைச்சு ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார்.
“மருத்துவர்கள் மீண்டும் தங்களது அடிப்படை பணியான நோயாளிகளைச் சிகிச்சையளிப்பதில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம். தற்போது அமைச்சின் கவனம் விளக்கமளிப்பதில் அல்ல; நிரந்தரமான மற்றும் பயனுள்ள தீர்வுகளை உருவாக்குவதில்தான் உள்ளது,” என்று அவர் கூறினார்.
மேலும், தற்போதைய சுகாதார அமைப்பை மனிதநேயத்துடனும் பணியாளர்களின் மரியாதையைப் பாதுகாக்கும் வகையிலும் மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



