தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒன்றிணைந்து நிதி திரட்டுவோம்! தமிழ் அறவாரியம் கோரிக்கை!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 6,

மலேசியத் தமிழ் அறவாரியத்தின் மூலமாக முன்னெடுக்கப்படும் தமிழ்ப்பள்ளிகள் தொடர்பான திட்டங்களை மேலும் விரிவுப்படுத்தும் நோக்கத்தில் நிதி திரட்டும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2004 பிப்ரவரி 14 தோற்றுவிக்கப்பட்ட தமிழ் அறவாரியம் மலேசியா முழுவதும் 500 கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளுக்குத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்திருப்பதாக அதன் தலைவர் மனோகரன் தெரிவித்தார்.

எதிர்வரும் அக்தோபர் 11 சுங்கை ரெங்காம் மாநாட்டு அரங்கில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்களுடன் இந்த நிதி திரட்டும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி திரட்டும் நிகழ்ச்சியைக் கல்வி அமைச்சின் துணை அமைச்சர் வோங் கா வோ தலைமை தாங்குவார் என்றும் நுழைவுச் சீட்டு தலா 250 ரிங்கிட்டிலிருந்து பெறலாம் என்றும் மேலதிகத் தகவல்களுக்கு க. மதன் ராஜ் அவர்களை 016-463 5423 என்ற எண்ணிலும் [email protected] என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி திரட்டல் நிகழ்ச்சியின் மூலமாகப் பெறப்படும் தொகை தமிழ் அறவாரியத்தின் கல்வி தொடர்பான செயல்திட்டங்களுக்கு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நல்வாழ்விற்குப் பெற்றோர்களின் பங்களிப்பு, தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பள்ளித் தலைமைத்துவ நிர்வாகப் பயிற்சிகள், மாணவர்களின் தமிழ்க்கல்வியியல் மேம்பாடு, கல்விக் கொள்கைகளுக்கான ஆய்வுகள், தாய்மொழிக் கல்விக்கான முன்னெடுப்புகள் என பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களைத் தமிழ் அறவாரியம் முன்னெடுக்கவிருப்பதாக நம்பிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *