திரள் நிதி அவமானம் அல்ல! சீமான் ஆவேசம்!

top-news
FREE WEBSITE AD

ஏப்ரல் 4,

அரசியல் கட்சியை நடத்த திரள் நிதி கேட்பதை நாங்கள் அவமானமாகக் கருதவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். திரள் நிதியைக் கேட்பது மக்களிடம் தான். நாங்கள் அரசியல் செய்வதே மக்களுக்காகத் தான் எனும் போது, எங்களுடைய தியாகத்தை உணர்ந்த மக்கள் எங்களுக்குக் கொடுக்கும் சிறிய தொகையில் அவர்களுடைய நம்பிக்கையும் கலந்திருக்கிறது என சீமான் தெரிவித்தார்.

என்னை பிச்சைக்காரன் என சொல்பவர்கள் உண்மையில் யார் தெரியுமா? திருட்டு நிதியில் கட்சி நடத்துபவர்கள் என சீமான் ஆவேசமாகத் தெரிவித்தார். திருடி, கொள்ளை அடித்து, மணலைத் திருடி, மக்களை ஏமாற்றி, அரசாங்கத்திற்கு வரி செலுத்தாமல் கருப்புப் பணத்தில் கட்சி நடத்தும் இந்த கூட்டம் என்னைப் பிச்சைக்காரன் என சொல்வதால் என்னை வீழ்த்திட முடியாது என சிமான் தெரிவித்தார். காரைக்குடியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி மட்டுமல்ல் தமிழ் நாடு முழுவதும் திரள் நிதியின் மூலமாகப் பெறப்படும் நிதியைக் கொண்டு தான் தேர்தலில் போட்டியிடுகிறோம் என சீமான் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *