கோயிலை இடியுங்கள்! நான் சரணடைகிறேன்! TAMIM DAHRI மிரட்டல்!
- THINAGAREN SANGGAREN
- 19 Mar, 2026
மார்ச் 19,
லங்காவியில் உள்ள Sri Maha Muniswarar கோயிலில் வழிபாட்டுக்காக இருந்த திரிசூலத்தைச் சேதப்படுத்திய வழக்கில் காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் TAMIM DAHRI எனும் ஆடவர் தற்போது வெளிநாட்டில் இருக்கும் நிலையில் மலேசியாவுக்குத் திரும்பி காவல்துறையிடம் சரணடைய வேண்டும் என்றால் சட்டத்தை மீறி கட்டப்பட்டிருக்கும் 4 கோயில்களை இடிக்க வேண்டும் என மிரட்டல் பதிவைச் சமூக வலைத்தலத்தில் பதிவேற்றியுள்ளார்.
நான் மலேசியா வருகிறேன். காவல்துறையிடம் சரணடைகிறேன். ஆனால் Jalan Pandanmas கோயில், புக்கிட் மெர்தஜாம் மருத்துவமனைக் கோயில், Seafield கோயில், Jakel கோயில் என 4 கோயில்களையும் இடித்தால் நான் மலேசியாவிற்கு வருகிறேன் என TAMIM DAHRI தெரிவித்துள்ளார். TAMIM DAHRI-இன் முகநூல் கணக்கைத் தேசிய பல்லூடகப் பாதுகாப்பு ஆணையமான MCMC முடக்கிய நிலையில் தற்போது Threads சமூகவலைத்தலத்தில் உள்ள tanah.malaya எனும் கணக்கில் இந்த மிரட்டலை வெளியிட்டுள்ளார்.
முன்னதாகக் காவல்துறைக்குப் பயந்து தாய்லாந்துக்குத் தப்பிச் சென்ற TAMIM DAHRI, நேற்று சவுதி அரேபியாவில் மெக்கா பயணத்தில் இருப்பதாகத் சமூகவலைத்தலத்தில் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். தற்போது அவர் மீண்டும் மலேசியாவுக்குத் திரும்ப வேண்டும் என்றால் சம்மந்தப்பட்ட 4 கோயில்களை இடிக்க வேண்டும் என வலியுறுத்தியிருப்பது பலரின் உணர்ச்சிகளைத் தூண்டியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



