நான் போராளி! குற்றவாளி அல்ல! நீதிமன்றம் வரமாட்டேன்! – TAMIM DAHRI ஆணவம்!

top-news
FREE WEBSITE AD

மே 17,

லங்காவியில் உள்ள ஒரு கோயிலில் வைக்கப்பட்டிருந்த திரிசூலத்தைக் காலால் மிதித்து சேதப்படுத்திய குற்றத்திற்காகத் தேடப்படும் TAMIM DAHRI எனும் சர்ச்சைக்குரிய ஆடவர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நீதிமன்றம் வலியுறுத்தினாலும் நீதிமன்றத்தில் ஆஜராகமாட்டேன் என தெரிவித்துள்ளார். நான் சட்டத்தை மீறுவதாக நினைக்க வேண்டாம், நான் போராளி. நான் பயந்து ஓடவில்லை. என்னை தற்காத்துக் கொள்கிறேன். போராளியான எனக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் நீதிமன்றத்தின் அழைப்பை நிராகரிப்பதாக TAMIM DAHRI அவருடைய சமூகவலைத்தலத்தில் தெரிவித்துள்ளார். 

கடந்த மார்ச் 17, TAMIM DAHRI நீதிமன்றத்தில் ஆஜராக மே 15 வரை கெடு விதிப்பதாக லங்காவி Majistret உத்தரவிட்டது. ஆனால் TAMIM DAHRI நீதிமன்றத்தில் ஆஜராகுவதை நிராகரித்துள்ளார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள TAMIM DAHRI நீதிமன்றத்தில் ஆஜராக 2 மாத அவகாசம் வேண்டும் என அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ள நிலையில் நான் குப்பைகளைச் சுத்தம் செய்வதைத் தொடரவிருக்கிறேன். அதனால் நீதிமன்றத்திற்கு வர விருப்பமில்லை என TAMIM DAHRI வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *