Zamri Vinoth & Tamim Dahri கைது செய்தால் இஸ்லாமியர் கொந்தளிப்பார்கள்! – PERLIS MUFTI கண்டனம்!
- THINAGAREN SANGGAREN
- 15 Mar, 2026
மார்ச் 15,
காவல்துறையின் கைது நடவடிக்கைகள் நியாயமானதாக இருக்க வேண்டும் என்றும் Zamri Vinoth & Tamim Dahri ஆகிய இருவரையும் காவல்துறை கைது செய்வது மலேசியாவில் இஸ்லாமியர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் என பெர்லிஸ் மாநில MUFTI Asri Zainul Abidin தெரிவித்துள்ளார். மலேசியாவின் சட்டங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்டுள்ளதா என்கிற சந்தேகம் தனக்கு எழுவதாக பெர்லிஸ் மாநில MUFTI Asri Zainul Abidin கருத்து தெரிவித்துள்ளார்.
Zamri Vinoth & Tamim Dahri தொடர்புடைய வழக்குகளில் காவல்துறை நியாயமாகச் செயல்படுகிறதா என்றால் அது இல்லை. Zamri Vinoth & Tamim Dahri ஆகிய இருவருக்கும் எதிராகக் காவல்துறை கைது நடவடிக்கை எடுப்பது மிகவும் ஆச்சரியமாக இருப்பதாகவும் இது இந்தியா இல்லை. இது மலேசியா என்றும் பெர்லிஸ் மாநில MUFTI Asri Zainul Abidin காவல்துறைக்கு நினைவூட்டுவதாகத் தெரிவித்தார்.
நாட்டின் முக்கியமானப் பிரச்சனைகளை விட்டு விட்டு. இஸ்லாமியச் சித்தாந்தத்தைப் பின்பற்றும் நியாயவாதிகளான Zamri Vinoth & Tamim Dahri ஆகிய இருவரின் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பது அவ்வளவு அவசியமானது இல்லை என பெர்லிஸ் மாநில MUFTI Asri Zainul Abidin தெரிவித்தார். காவல்துறையின் இப்படியான நடவடிக்கையால் இஸ்லாமியர்களிடையே மேலும் கோபத்தை ஏற்படுத்தும் என பெர்லிஸ் மாநில MUFTI Asri Zainul Abidin காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



