நீங்களே சரணடையுங்கள்! ZAMRI VINOTH, TAMIM DAHRI இருவருக்கும் துணை அமைச்சர் எச்சரிக்கை!
- THINAGAREN SANGGAREN
- 14 Mar, 2026
மார்ச் 14,
இந்து கோயில்களை அவமதிக்கும் செயல்களில் ஈடுபட்ட ZAMRI VINOTH, TAMIM DAHRI ஆகிய இருவரும் காவல் நிலையத்தில் சரணடைவது நல்லது என சட்ட நிர்வாகச் சீர்திருத்த அமைச்சின் துணை அமைச்சர் M Kulasegaran தெரிவித்தார். தொடர்ந்து இவர்கள் அனைவரும் பல்வேறு வகையில் இந்துக்களின் புனிதங்களை அவமதித்ததை அனைவரும் அறிவோம். தொடர்ந்து பலரும் காவல் நிலையத்தில் அளித்த புகார்களின் அடிப்படையில் தேசிய காவல் துறை இப்போது கைது நடவடிக்கையை மேற்கொள்ளவிருக்கிறது என IPOH BARAT டி.ஏ.பி நாடாளுமன்ற உறுப்பினருமான M Kulasegaran விளக்கமளித்தார்.
சட்டத்தை மீறி செயல்பட யாருக்கும் உரிமை இல்லை என்பதை அவர்கள் இருவரும் உணர வேண்டும் என்றும் அவர்களாகவே தானாக முன் வந்து சரணடைந்து விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கினால் இந்த சர்ச்சை மீண்டும் வீரியமடையாமல் சுமூகமாக முடியும் என துணை அமைச்சர் M Kulasegaran தெரிவித்தார். அவரவர் சொந்த மதத்தைப் பற்றியும் சமய நம்பிக்கைகள் பற்றியும் விவாதங்களும் எதிர்கருத்துகளை வெளியிட்டாலும் இங்கே யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் இல்லை என்றால் அதில் தவறு இல்லை. ஆனால் மற்ற மத நம்பிக்கைகள் குறித்து கேள்வியோ விமர்சனமோ முன்வைப்பது அவசியமற்றது என சட்ட நிர்வாகச் சீர்திருத்த அமைச்சின் துணை அமைச்சர் M Kulasegaran நினைவூட்டினார்,
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



