ரமலான் மாதத்தில் உணவருந்திய சீனரை அறைந்த இஸ்லாமியர்! அமைச்சர் கண்டனம்!

top-news

மார்ச் 17,


ரமலான் நோன்பின் போது சாப்பிடுவதற்காக உணவகத்திற்குள் நுழைந்த இளைஞரைப் பல முறை கன்னத்தில் அறைந்த ஆடவர் நீ இஸ்லாமியனா? உன்னுடைய அடையாள அட்டையைக் காண்பி என’’ மிரட்டியபடியே அந்த இளைஞரை அறையும்படியானக் காணொலி சமூகவலைத்தலத்தில் பரவியதைத் தொடர்ந்து ஒற்றுமை துறை அமைச்சர் Datuk Aaron Ago Dagang கடுமையானக் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
ரமலான் புனித மாதத்தில் இஸ்லாமியர்களுக்கு முன்னிலையில் சாப்பிடலாமா வேண்டாமா என்பது தனிநபர் விருப்பமாக இருந்தாலும் அதிகப்படியான இஸ்லாம் அல்லாதவர்கள் நோன்பு இருக்கும் இஸ்லாமியர்கள் முன்னிலை சாப்பிடுவதைத் தவிர்த்து வருவதை Datuk Aaron Ago Dagang சுட்டிக் காட்டினார்.

நோன்பில் இருக்கும் இஸ்லாமியர்களே சாப்பிட்டாலும் அதற்கு தகுதியானக் காரணங்களும் அமைந்திருக்கும் என்றும் யாரையும் தாக்கவும் கண்டிக்கவும் எந்தவொரு தனிநபருக்கும் அதிகாரம் இல்லை என்பதை Datuk Aaron Ago Dagang வலியுறுத்தினார். இளைஞரைத் தாக்கிய ஆடவர் மீது காவல்துறையில் புகாரளிக்கப்பட்டிருக்கும் நிலையில் காவல்துறையினர் விசாரணையைமேற்கொள்வதாக் Datuk Aaron Ago Dagang தெரிவித்தார்.

Seorang lelaki Islam menampar seorang pemuda Cina kerana makan di restoran semasa Ramadan. Video kejadian tular itu mencetuskan kecaman daripada Menteri Perpaduan Datuk Aaron Ago Dagang, yang menegaskan tiada sesiapa berhak menghukum orang lain. Polis sedang menyiasat insiden tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *