தொடர்ந்து 7 நிலச்சரிவுகள்! மீட்புப் பணிகள் துரிதம்!
- Thinagaren Sanggaren
- 14 Sep, 2025
செப்டம்பர் 14,
கனமழையின் காரணமாகக் கோத்தா கினாபாலுவில் உள்ள 7 இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டிருப்பதாகச் சபா மாநில மீட்பு ஆணைய இயக்குநர் Ordine Gilu தெரிவித்தார். நேற்று இரவு முதல் இன்று நள்ளிரவு வரையில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் 2 வீடுகள் தரைமட்டமானதாக Ordine Gilu தெரிவித்தார். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சிக்கி வெளியேற முடியாமல் தவிக்கும் பொதுமக்களைச் சபா மீட்பு ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து மீட்டு வருவதாகவும் Ordine Gilu தெரிவித்தார்.
கனமழை தொடர்ந்து
நீடித்தால் இந்த நிலச்சரிவு மேலும் அதிகரிக்கும் என சபா கனிமவளப் புவியியல் துறை எச்சரித்துள்ளதால்
நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் மக்களைப் பாதுகாப்பான இடத்திற்கு
மாற்றி வருவதாகச் சபா மாநில மீட்பு ஆணைய இயக்குநர் Ordine Gilu தெரிவித்தார். மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களையும்
மீட்பு ஆணைய அதிகாரிகள் மீட்டு வருவதாகவும் வெள்ள நிவாரண மையங்களில் மீட்கப்பட்டவர்கள்
தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் சபா மாநில மீட்பு ஆணைய இயக்குநர் Ordine Gilu தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



