மாற்று நிலம் வழங்கப்படும்-பிரதமர் உறுதி

top-news

செமிஞ்சி, ஜன. 27-

நகரான்மை வளர்ச்சியின் பெயரில் கையகப்படுத்தப்படும் மலாய் நில ஒதுக்கீடுகள் நிரந்தரமாக இழக்கப்படமாட்டாது; அதற்குப் பதிலாக மாற்று நிலம் வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்தார்.

செமிஞ்சி, கம்பூங் சுங்கை பெனிங் பகுதியில் நடைபெற்ற பொது உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், வளர்ச்சி என்பது மக்களின் உரிமைகளைப் புறக்கணிக்கக் கூடாது என வலியுறுத்தினார். சாலை அமைப்பு உள்ளிட்ட மேம்பாட்டு திட்டங்களுக்காக மலாய் நில ஒதுக்கீடுகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்குச் சமமான மாற்று நிலம் வழங்குவது அரசின் கட்டாயமான கொள்கை என அவர் கூறினார்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும் சிலாங்கூர் மாநில அரசுக்கும் இடையே தெளிவான புரிதல் இருப்பதாகவும், பாதிக்கப்படும் மலாய் நில ஒதுக்கீடுகளுக்கு உரிய இடங்களில் மாற்று நிலம் ஒதுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மலாய் நில ஒதுக்கீடு தொடர்பாக எந்தவித சமரசமும் செய்யப்படாது என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *