அரசு நிலத்தை அபகரித்தால் கடுமையான நடவடிக்கை! – சிலாங்கூர் மெந்திரி பெசார் Amirudin Shari எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 6,

அரசு நிலத்தை அபகரித்திருக்கும் நபர்களுக்கு எதிராக மாநில அரசு கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளவிருப்பதாகச் சிலாங்கூர் மாநில மெந்திரி பெசார் Datuk Seri Amirudin Shari தெரிவித்தார். அரச்ய் நிலங்களை அபகரித்தல், சட்டவிரோதமாகக் கழிவுகளைப் பொது இடங்களில் கசியவிடுதல், பொது இடங்களை ஆக்கிரமித்தல் என சிலாங்கூர் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்படியான இந்த 3 நடவடிக்கைகளுக்கு எதிராக மாவட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை வேண்டும் என சிலாங்கூர் மாநில மெந்திரி பெசார் Datuk Seri Amirudin Shari வலியுறுத்தினார். 

இன்று காலை 9 மாவட்ட அதிகாரிகளுடனான சிறப்புச் சந்திப்புக் கூட்டத்தில் இது குறித்து தாம் விளக்கம் கேட்டதாகவும் சமரசம் இல்லாமல் அரசு நிலங்களை அபகரிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பெரும்புள்ளியாகவே இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்க வேண்டாம் என சிலாங்கூர் மாநில மெந்திரி பெசார் Datuk Seri Amirudin Shari தெரிவித்துள்ளார். சிலாங்கூர் மக்கள் இந்த நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவதையும் பேரிடர்களுக்கு இந்த 3 நடவடிக்கைகளும் முக்கிய பங்கு வகிப்பதாகச் சிலாங்கூர் அரசு கருதுவதால் இனியும் தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுமக்களும் அரசு அதிகாரிகளின் சோதனை நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சிலாங்கூர் மாநில மெந்திரி பெசார் Datuk Seri Amirudin Shari கேட்டுக்கொண்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *