சென் டாங் ஜீ-டோ ஈ வெய் மலேசியா ஓப்பன் காலிறுதிக்குத் தகுதி பெற்றனர்

top-news

கோலாலம்பூர், ஜன. 8-

கலப்பு இரட்டையர் பிரிவில் சென் டாங் ஜீ-டோ ஈ வெய் ஜோடி, அக்சியாடா அரங்கில் நடைபெற்று வரும் மலேசியா ஓப்பன் போட்டியில் நாட்டின் முதல் பிரதிநிதியாக காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

உலகின் நான்காம் இடத்தில் உள்ள இந்த ஜோடி, சக மலேசிய வீரர்களான ஹூ பாங் ரோன்-செங் சு யின் ஜோடியை 21-13, 23-21 என்ற நேர் செட்களில் 41 நிமிடங்களில் வீழ்த்தியது.

முதல் செட்டில் டாங் ஜீ-ஈ வெய் ஜோடியின் ஆதிக்கம் தெளிவாகத் தெரிந்தது. அவர்கள் இறுக்கமான வலைக்கட்டுப்பாடு, தொடர்ச்சியான தாக்குதல்களுடன் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21-13 என முடித்தனர்.

இரண்டாம் செட்டில் போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. பாங் ரோன்-சு யின் ஜோடி தங்கள் ஆட்டத்தை மேம்படுத்தி, போட்டியை மூன்றாவது செட்டுக்கு இழுக்க முயன்றனர். அவர்கள் 19-16 என முன்னிலை பெற்றிருந்த நிலையில், டாங் ஜீ-ஈ வெய் திரும்பி வென்று 23-21 என கைப்பற்றினர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *