எரிபொருள் மானியச் சுமை மாதம் RM3.5 பில்லியன்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 8-

நாட்டின் எரிபொருள் மானியச் சுமை இன்னும் உயர்ந்த நிலையில் நீடிக்கும் என அரசு எதிர்பார்க்கிறது. Brent கச்சா எண்ணெய் விலை தற்போது ஒரு பீப்பாய்க்கு AS$70 முதல் AS$90 வரை மிதமான நிலையில் இருந்தாலும், மானியச் செலவு மாதத்திற்கு சுமார் RM3.5 பில்லியன் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக Menteri Ekonomi, Akmal Nasrullah Mohd Nasir தெரிவித்தார்.

மக்களின் நலனைப் பாதுகாக்க அரசு எரிபொருளுக்கான இலக்கு மானியத்தை தொடர்ந்து நிலைநிறுத்தும் என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில், நிர்வாகச் செலவுகளைச் சிறப்பாக நிர்வகித்து, விலை அழுத்தங்களைச் சமாளிக்க அரசு உறுதியாகச் செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில், RMK13 கீழ் உள்ள வளர்ச்சி செலவுகள் அதிக தாக்கம் அளிக்கும் திட்டங்கள் மற்றும் திட்டப்பணிகளுக்கு வழங்கப்படும் என்று Akmal Nasrullah குறிப்பிட்டார்.

அவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கும் நேரடி பயன் அளிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என அவர் கூறினார்.

Mohd Syahir Che Sulaiman (PN-BACHOK) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.

உலக எண்ணெய் விலை, குறிப்பாக மத்திய கிழக்கு மோதல்களால் நிலைமாறி வரும் சூழலில், எரிபொருள் மானியத்தை தொடர்வதன் அவசியம் குறித்து அந்த கேள்வி எழுப்பப்பட்டது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *