சாலையோரம் வாகனத்தை நிறுத்த கட்டணம் வசூலித்த ஐவர் கைது!

top-news

மார்ச் 18,

சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துபவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் கும்பலைச் சேர்ந்த ஐவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தென் ஜொகூர் பாரு மாவட்டக் காவல் ஆணையர் Raub Selamat தெரிவித்தார். ஜொகூர் பாருவில் உள்ள Jalan Wong Ah Fook , Jalan Ibrahim சாலைகளில் அமைந்துள்ள வணிகக் கடைகளுக்கு முன் நிறுத்தப்படும் வகனங்களிடம் தலா RM20 ஒரு கும்பல் வசூலித்து வருவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் நேற்றிரவு 11.45 மணிக்கு ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கைது செய்ப்பட்டுள்ள ஐவரில் ஒருவர் வெளிநாட்டவர் என்றும், அனைவரும் 29 முதல் 53 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ஐவரும் சம்மந்தப்பட்ட சாலைகளில் வசூல் செய்து போலி ரசீதுகளை வழங்கி வருவதாகவும் தெரிய வந்துள்ளது. ஜொகூரின் முக்கிய சாலைகளில் வாகனம் நிறுத்துபவர்கள் வாகனம் நிறுத்துவதற்காகப் பிரித்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாகனத்தை நிறுத்தும்படி தென் ஜொகூர் பாரு மாவட்டக் காவல் ஆணையர் Raub Selamat வலியுறுத்தினார்.

5 individu termasuk seorang warga asing ditahan dalam operasi membanteras parkir haram di Johor Bahru. Mereka dipercayai meminta wang secara tidak sah daripada orang ramai. Polis merampas wang tunai RM20 dan memberi amaran operasi akan diteruskan bagi membendung aktiviti ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *