மனைவியின் தங்கையுடன் கடலுக்குச் சென்றவர் நீரில் மூழ்கி பலி!
- Thinagaren Sanggaren
- 14 Dec, 2025
டிசம்பர் 14,
மீன் பிடிப்பதற்காகத் தன் மனைவியின்ன் தங்கையுடன் கடலுக்குச் சென்றவர் நீரில் மூழ்கி இறந்ததாக நம்பப்படுகிறது. கடந்த வியாழக் கிழமை Tanjung Sirik கடலுக்குச் சென்ற இருவரின் படகு கடுமையான கடல் அலையால் கட்டுப்பாட்டை இழந்து மூழ்கியதாகவும் படகில் இருந்த பெண் மீனவர்களால் மீட்கப்பட்ட போதிலும் மற்றொருவரைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் டாரோ மாவட்டக் காவல் ஆணையர் DSP Rahim Mihos தெரிவித்தார்.
தொடர் தேடுதலுக்குப் பின்னர் இன்று காலை 59 வயதானவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டதாக டாரோ மாவட்டக் காவல் ஆணையர் DSP Rahim Mihos தெரிவித்தார். நீர்லி மூழ்கிய பெண் தொடர்ந்து நீச்சலடித்ததால் கடலில் இருந்த மீனவர்களால் மீட்கப்பட்டதாகவும் அலையின் வேகம் அதிகமாக இருந்ததால் 59 வயது நபர் நீரில் மூழ்கியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சடலமாக மீட்கப்பட்ட 59 வயது நபரின் உடல் பிரேதப்பரிசோதனைக்காக மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக டாரோ மாவட்டக் காவல் ஆணையர் DSP Rahim Mihos தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
RAMALA
அதென்ன தலைப்பு? மைத்துனி என்று எழுதவும்.



