கூட்டணியிலிருந்து ஜிஆர்எஸ் ஸ்டார், எஸ்ஏபிபி வெளியேறின!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 3-

காபுங்ஙான் ரக்யாட் சபா (ஜிஆர்எஸ்) கூட்டணியிலிருந்து ஸ்டார் மற்றும் எஸ்ஏபிபி ஆகிய இரு கட்சிகள் வெளியேறியிருப்பதை, அக்கூட்டணி நேற்று உறுதிப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து வரும் சட்டமன்ற இடைத் தேர்தலில் தங்களின் சொந்த கட்சி சின்னங்களின் கீழ் போட்டியிடப் போவதாக அவ்விரு கட்சிகளும் அறிவித்திருக்கின்றன.

அதோடு, சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களுக்கு எதிராக தங்களின் வேட்பாளர்களை களமிறக்க விருப்பதாகவும் ஸ்டார் மற்றும் எஸ்ஏபிபி அறிவித்ததாக, ஜிஆர்எஸ் தலைமைச் செயலாளர் மசிடி மஞ்சுன் நேற்று தெரிவித்தார். எனினும், பக்காத்தான்
ஹராப்பானுடனான ஜிஆர்எஸ்ஸின் தேர்தல் உடன்பாட்டுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்று அது தீர்க்கமாகக் கூறியது.

"சுமார் இரண்டு மணி நேர வெளிப்படையான மற்றும் நேர்மை உணர்வுட னான சந்திப்புக்குப் பின்னர், சொந்தக் கட்சி சின்னத்தின் கீழ் போட்டியிடுவதென்று முடிவு செய்யும் எந்த ஒரு கூட்டணிக் கட்சியும் ஜிஆர்எஸ்ஸிலிருந்து வெளியேறிவிட்டதாக அர்த்தமாகும் என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டது.

“அக்கட்சிகளின் வேட்பாளர்கள் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜிஆர்எஸ் கூட்டணியை இனி பிரதிநிதிக்க மாட்டார்கள்” என்று அவர் தெரிவித்தார். இந்நிலையில், ஜிஆர்எஸ் துணைத் தலைவராக இருக்கும் ஸ்டார் கட்சித் தலைவர் ஜெஃப்ரி கிட்டிங்கானின் நிலை குறித்து கேட்டபோது.
அது ஜிஆர்எஸ் கூட்டணித் தலைவரும் மாநில முதலமைச்சருமான ஹஜிஜி நோரின் முடிவைப் பொறுத்தது என்று மசிடி கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *