யார் பிரதமர் என்பது முக்கியமல்ல! - பக்காத்தானை வீழ்த்த வேண்டும்! - பாஸ் சூளுரை
- Shan Siva
- 12 Sep, 2025
கோலாலம்பூர், செப் 12: நாட்டின் 11வது பிரதமராக யார் வர வேண்டும் என்பதை தீர்மானிப்பதை
விட, 16வது பொதுத்
தேர்தலில் (GE16) வெற்றி பெறுவது
பாஸ் கட்சிக்கு முக்கியம் என்று பாஸ் உலமா மன்றத தலைவர் டத்தோ அகமது யஹாயா தெரிவித்தார்.
பாஸ், தான் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மந்திரி பெசார் வேட்பாளரை ஒருபோதும்
முன்கூட்டியே அறிவித்ததில்லை என்றும், ஆனால் நேரம் வரும்போது, அதன் தலைவர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
தேர்தலில் வெற்றி பெறுவதே தங்கள் முக்கிய கவனம். இதை அடைய, தேர்தல் இயந்திரம் வலுவாக இருக்க
வேண்டும், தங்கள் கட்சியின் அடித்தளம்
முழுமையானதாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும் தங்களின் உடனடி முன்னுரிமை பக்காத்தான் ஹராப்பான்-பாரிசன் நேஷனல் அரசாங்கத்தை வீழ்த்துவதாகும் என்று அவர் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



