பெர்சத்து முன்னாள் தலைவர்களையும் வரவேற்க அம்னோ தயாராக உள்ளது-அகமட் மஸ்லான்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 13-

பெர்சத்து உள்ளிட்ட எந்தக் கட்சியிலிருந்தும் முன்னாள் உறுப்பினர்கள் அல்லது தலைவர்கள் அம்னோவில் இணைய விரும்பினால், கட்சி அவர்களை வரவேற்க தயாராக உள்ளது என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் Datuk Seri Dr Ahmad Maslan தெரிவித்துள்ளார்.

புதாத்தானில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “Rumah Bangsa” முயற்சியின் கீழ் அம்னோவில் சேர விரும்புவோரின் விண்ணப்பங்கள் அனைத்தும் முதலில் நாட்டின் தற்போதைய சட்டங்களின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும்” என்றார்.

குறிப்பாக, கட்சி தாவல் தடுப்பு சட்டமான “Anti-Lompat Parti” சட்டத்திற்கு முரணாக இருக்கக்கூடாது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

“நான் ‘Rumah Bangsa’ குழுவின் உறுப்பினராக இருக்கிறேன். பெர்சத்து தலைவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சூழலில், அவர்கள் அம்னோவில் இணைய முன்வந்தால், முதலில் கட்சி தாவல் தடுப்பு சட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார்.

மேலும், “அந்த சட்டத்தில் எந்த தடையும் இல்லையெனில், அவர்கள் அம்னோவில் சேரலாம். தடைகள் இருந்தால், முதலில் அந்த பிரச்சினைகளை அவர்கள் தீர்க்க வேண்டும்,” என்றும் அகமட் மஸ்லான் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *