மலாக்காவில் 3 இந்தியர்களைச் சுட்டுக் கொன்ற காவல்துறையின் மீது விசாரணை! – AGC உத்தரவு!

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 17,

மலாக்கா டுரியான் துங்கால் செம்பனை தோட்டத்தில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 3 இந்திய இளைஞர்கள் தொடர்பான வழக்கை  விசாரிக்க தலைமை நீதித்துறையான Attorney General's Chambers உத்தவிட்டுள்ளது. கடந்த நவம்பர் 24 அதிகாலை 4.30 மணிக்கு 24 முதல் 29 வயதுடைய 3 இளைஞர்களையும் மலாக்கா காவல்துறையின் 8 அதிகாரிகள் கொண்ட குழு சுட்டுக்கொன்றது. வழக்கமான சோதனை நடவடிக்கையின் போது சம்மந்தப்பட்ட மூவரும் காவல் அதிகாரியைப் பாராங் கத்தியால் தாக்கியதால் காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியதாக மலாக்கா காவல்துறை தலைவர்  Datuk Dzulkhairi Mukhtar விளக்கமளித்திருந்தாலும் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினர் காவல்துறையின் விளக்கத்தை மறுத்து தேசிய காவல்துறையில் காவல்துறையினர் திட்டமிட்டு அந்த மூவரையும் கொலை செய்திருப்பதாகப் புகார் அளித்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, தேசிய நீதித் துறை 3 இளைஞர்கள் காவல்துறையினரால் சுடப்பட்டிருப்பதைக் கொலை எனும்படியாகக் கருதி விசாரணை ஆணையம் அமைக்கப்படவிருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. தேசிய நீதித் துறையின் அறிக்கையை மதித்து, அதன்படி சிறப்பு விசாரணை குழு அமைப்பதாகப் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim நம்பிக்கை தெரிவித்துள்ளார். உயிரிழந்த மூவரின் குற்றப்பின்னணிகள் குறித்தும் துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியதாகக் கருதப்படும் காவல்துறையின் மீதும் முழுமையாக விசாரணையை அந்த சிறப்பு விசாரணை ஆணையம் மேற்கொள்ளும் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim உறுதியளித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *