கோயிலில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லையா? Mrs Grand Sea World Jeyabarathi வலியுறுத்து!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 13,

செப்பாங்கில் உள்ள கோயிலில் அரச்சகர் ஒருவர் இளம்பெண்ணைப் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதை Mrs Grand Sea World 2024 பட்டம் பெற்ற Jeyabarathi Raja கண்டித்துள்ளார். பெண்களுக்கான பாதுகாப்பை அனைத்து தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தமது ஆதரவை முழுமையாக வழங்குவதாக ஜெயபாரதி ராஜா நம்பிக்கை அளித்தார். 

காவல்துறை இந்த வழக்கை எந்தவொரு பாராபட்சமும் இல்லாமல் வெளிப்படைத் தன்மையுடன் விசாரிக்கப்பட்ட வேண்டும் என ஜெயபாரதி ராஜா கேட்டுக்கொண்டார். 

பாதிக்கப்பட்டிருப்பது ஒரு பெண். இது பெண்ணுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டிருக்கும் பாலியல் சீண்டல் என்பதைச் சமூகம் உணர வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு எதிராக வெளிவரும் கருத்துகள் தேவையற்றது என்றும் இதனால் குற்றம் புரிந்தவர் காப்பாற்றப்படுவார்கள் என ஜெயபாரதி ராஜா எச்சரிக்கை விடுத்தார். 

லிஷாலினி எனும் இளம்பெண் வெளிப்படையாகத் தனக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தைத் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களில் வெகு சிலர் மட்டுமே தங்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியைச் சமூகத்திடமும் வெளியிட்டுள்ளனர்.  அவர் நம் சமூகத்தை நம்பி, இந்த சமூகம் நமக்கு ஆதரவாக இருக்கும் என நம்பிக்கையோடு வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு ஆதரவாக நம் சமூகம் ஒன்றிணைய வேண்டும் என ஜெயபாரதி ராஜா கேட்டுக்கொண்டார். 


பொது இடங்களிலும் அலுவலகங்களிலும் நிகழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் கோயில்களிலும் நிகழ்கிறது. மனநிம்மதிக்காக வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் பெண்களை உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுவதற்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டுமென ஜெயபாரதி ராஜா அழைப்பு விடுத்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *