தெங்கு சஃப்ரூல் இனி பி.கே.ஆர் உறுப்பினர்!
- Thinagaren Sanggaren
- 09 Aug, 2025
ஆகஸ்ட் 9,
அமைச்சரும் அம்னோவின் முன்னாள் உச்சமன்ற உறுப்பினருமான Tengku Datuk Seri Zafrul Abdul Aziz அதிகாரப்பூர்வமாகப் பி.கே.ஆரின் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பதை இன்று காலை உறுதிப்படுத்தினார். வர்த்தகத் தொழில்துறை முதலீட்டு அமைச்சரான Tengku Datuk Seri Zafrul Abdul Aziz கடந்த மே மாதம் அம்னோவில் வகித்து வந்த அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்த நிலையில் பி.கே.ஆரில் இணைவதற்கான விருப்பத்தையும் தெரிவித்திருந்தார்.
அம்னோவுக்குத் துரோகம் செய்யும் எந்தவொரு தரப்பினரையும் ஒற்றுமைக் கூட்டணிக் கட்சிகள் அங்கீகரிக்க கூடாது என அம்னோவிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும் பி.கே.ஆர் Tengku Datuk Seri Zafrul Abdul Aziz-இன் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வதாகவும் பி.கே.ஆர் தலைமை Tengku Datuk Seri Zafrul Abdul Aziz-இன் விண்ணப்பம் தொடர்பாகக் கலந்துரையாடலை நடத்துவதாகவும் தெரிவித்த நிலையில் தற்போது பி.கே.ஆர் அம்பாங்கில் உறுப்பினராகியிருப்பதாக Tengku Datuk Seri Zafrul Abdul Aziz தெரிவித்துள்ளார். பி.கே.ஆர் தலைமையிலிருந்து கடந்த வாரமே இந்த நியமனக் கடிதத்தைப் பெற்றதாகவும் பி.கே.ஆரில் அதிகாரப்பூர்வமாக இணைவது மகிழ்ச்சியளிப்பதாகவும் வர்த்தகத் தொழில்துறை முதலீட்டு அமைச்சரான Tengku Datuk Seri Zafrul Abdul Aziz தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



