தெங்கு சப்ரூலுக்கு எதிரான அம்னோவின் கோரிக்கையை ஏற்கிறேன்! -அன்வார் விளக்கம்!

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 21,

அம்னோவிலிருந்து வெளியேறிய Datuk Seri Tengku Zafrul Aziz பி.கே.ஆரில் இணைக்கப்பட்டிருப்பதால் அதிருப்தியை வெளிப்படுத்திய அம்னோவினர் மனநிலையைத் தாம் மதிப்பதாகப் பிரதமரும் பி.கே.ஆர் கட்சித் தலைவருமான Datuk Seri Anwar Ibrahim விளக்கமளித்தார். தெங்கு சப்ரூல் மீதான அம்னோவின் அதிருப்தி நியாயமானது என அன்வார் தெரிவித்தார். அம்னோவின் தலைமை தெங்கு சப்ரூலின் நியமனம் குறித்து அதிருப்திக் கடிதத்தை அனுப்பியிருப்பதாகவும் அக்கடிதம் இப்போது வரையும் என்னிடம் தான் இருக்கிறது என்றும் அதனை பி.கே.ஆர் பொதுச் செயலாளருடனும் பி.கே.ஆர் தலைமையுடனுமான சந்திப்பில் அது குறித்து கலந்தாலோசிப்பதாகவும் அன்வார் உறுதியளித்தார். 

இது பக்காத்தான் பாரிசான் எனும் இரு கட்சிகளுக்கிடையிலானது என்றும் அரசாங்கத்துடன் தொடர்புப்படுத்திக்கொள்ள வேண்டாம் என்றும் பிரதமர் அன்வார் நினைவூட்டினார். பி.கே.ஆரின் சட்டத்தின்படி மலேசியர்கள் உறுப்பினராகலாம் என்பதால் தெங்கு சப்ரூலின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பி.கே.ஆர் உறுப்பினர்கள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் கட்சி தலைவரான நான் மட்டும் முடிவு எடுக்க முடியாது. அதற்கென ஒழுங்கு நடவடிக்கைக்குழு, தலைமைப் பொதுக்குழு என்பன உள்ளது. அவர்களுடனான விவாதத்திற்குப் பின்னர் தெங்கு சப்ரூல் குறித்து அம்னோவுக்கு விளக்கமளிக்கபடும் என Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *