தேர்தலில் போட்டியிடமாட்டேன்! – TENGKU ZAFRUL உறுதி!
- Thinagaren Sanggaren
- 05 Oct, 2025
அக்தோபர் 5,
அம்பாங் பி.கே.ஆரில் உறுப்பினரானது அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாங் தொகுதியில் போட்டியிடுவதாக வெளிவந்திருக்கும் செய்தியில் உண்மை இல்லை என முதலீடு வர்த்தகத் தொழில்முறை அமைச்சர் Tengku Zafrul தெரிவித்தார். ஒரு கட்சியிலிருந்து விலகி புதிய கட்சியில் நான் இணைந்துள்ளேன். புதிதாக இணைந்திருக்கும் நான் தேர்தலில் போட்டியிடுவது நியாயமாக இருக்காது என Tengku Zafrul தெரிவித்தார். பி.கே.ஆரில் இணையும் முன்னர் அம்பாங் பி.கே.ஆர் உறுப்பினர்கள் பலரின் ஆலோசனைகளைத் தாம் கேட்டதாகவும் அதன்படி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தாம் எந்தவோர் எதிர்பார்ப்பையும் கொண்டிருக்கவில்லை என்றும் Tengku Zafrul விளக்கமளித்தார்.
இது பி.கே.ஆரின் தலைவராக இருக்கும் அன்வாருக்கும் தெரியும். பொதுவாக நாடாளுமன்றத் தேர்தலின் போது தொகுதி பங்கீடுகள் நடத்தப்படும். அதன் பின்னரே வேட்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். தேர்தலுக்கு முன்னமே வேட்பாளர்களை நியமிப்பதை எந்தவொரு கட்சியும் ஏற்காது என்றும் அது தொண்டர்களிடையே நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும் என்றும் Tengku Zafrul தெரிவித்தார். நான் பி.கே.ஆரில் இணைந்தால் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்கிறபடி எந்தவொரு உடன்பாட்டையும் கொண்டிருக்கைவில்லை என Tengku Zafrul விளக்கமளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



