லாரி மோதியதில் இராணுவ வீரர் பலி!

top-news

மே 31,

கட்டுப்பாட்டை இழந்த லாரி மோட்டார் சைக்கிளையும் சாலையோரக் கடையையும் மோதி விபத்தை ஏற்படுத்தியதில் இராணுவ வீரர் உயிரிழந்தார். சுங்கை பூலோவில் உள்ள Bandar Baru சாலையில் பிற்பகல் 1.35 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்ததாக Sungai Buloh, மாவட்டக் காவல் ஆணையர் Mohd Hafiz Muhammad Nor தெரிவித்தார். லாரியின் பிரேக் செயலிழந்தால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தொழுகைக்காக மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த இராணுவ வீரரின் மீது லாரி மோதியதில் சம்மந்தப்பட்ட இராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் லாரி ஓட்டுநர் படுகாயம் அடைந்ததாகவும் Sungai Buloh, மாவட்டக் காவல் ஆணையர் Mohd Hafiz Muhammad Nor தெரிவித்தார். விபத்துக்குக் காரணமான லாரி ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் சிகிச்சைக்குப் பின்னர் விசாரணையைத் தொடர்வதாக Sungai Buloh, மாவட்டக் காவல் ஆணையர் Mohd Hafiz Muhammad Nor தெரிவித்தார்.

Seorang anggota tentera maut di lokasi selepas dilanggar lori hilang kawalan di Jalan Bandar Baru, Sungai Buloh. Lori terbabit juga merempuh motosikal dan kedai tepi jalan. Siasatan awal mendapati brek lori gagal berfungsi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *