நைஜீரியாவில் வான்வழி தாக்குதல்: போகோ ஹராம் தீவிரவாதிகள் 40 பேர் பலி

top-news

அபுஜா, ஜன. 19-

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு நாள் வான்வழி இராணுவ நடவடிக்கையில், போகோ ஹராம் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக நைஜீரிய விமானப்படை தெரிவித்துள்ளது. 

நைஜீரிய விமானப்படையின் பேச்சாளர் எஹிமென் எஜோடாமே வெளியிட்ட எழுத்துப் பூர்வ அறிக்கையில், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் போகோ ஹராம் தொடர்புடைய இலக்குகளை நோக்கி வான்வழி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினார்.

இந்த தாக்குதல்களில் 40 தீவிரவாதிகள் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இராணுவம் துல்லியமான உளவு தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை முன்னெடுத்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு முதல் நைஜீரியா, போகோ ஹராம், அதனுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த வன்முறைகள் இதுவரை பத்தாயிரக்கணக்கான உயிரிழப்புகளுக்கு காரணமாகியுள்ளதுடன், நைஜீரியா மட்டுமின்றி அண்டை நாடுகளான கேமரூன், சாட் ,  நைஜர் ஆகிய நாடுகளிலும் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *