40,000 சுகாதார வணிகர்களுக்கு RM89.6 மில்லியன் நிதி! – துணை அமைச்சர் தியோ நீ சிங்!

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 10,

சுகாதார வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் புதிய சுகாதார மையங்களை அமைக்கும் 40,000 க்கும் மேற்பட்ட வணிகர்களுக்கு RM89.6 மில்லியன் நிதி வழங்கப்பட்டிருப்பதாகத் தொடர்புத் துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் சிறு வணிகர்களின் சுமையைக் குறைக்க இந்த நிதி பயன்படுத்தப்பட்டு வருவதைத் தியோ நீ சிங் சுட்டிக்காட்டினார். இத்திட்டம் 40,000 சிறு வணிகர்களுக்கானது என்றும் இது வரையில் 38,804 சுகாதார வணிகர்கள் பயன்பெற்றிருப்பதாகவும் தியோ நீ சிங் தெரிவித்தார். 

மலேசிய மருத்துவச் சங்கத்தின் மூலமாக 2,838 கிளிக்குகளும் மருந்தகங்களும் இத்திட்டத்தின் மூலமாகப் பயனடைந்திருப்பதைத் தியோ நீ சிங் சுட்டிக்காட்டினார். இது வரை நாட்டிலுள்ள 50% மருந்தகங்கள் டிஜிட்டல் செய்யப்பட்டிருப்பதாகவும் அடுத்த 2026 ஆம் ஆண்டுக்குள் 90% டிஜிட்டல் செய்யப்படும் என்றும் தியோ நீ சிங் நம்பிக்கை தெரிவித்தார். 13 ஆவது மலேசியப் பெருந்திட்டத்தின் முக்கிய அம்சமாக டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியில் மக்களின் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு சுகாதார மையங்களும் டிஜிட்டலாக்கப்பட்டு வருவதாகவும் தியோ நீ சிங் தெரிவித்தார். 

2024 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டை சிறு வணிகர்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட நிலையில் முழுமையாக அதன் செயல்திறன் ஆய்வுக்குற்படுத்தப்பட்டதாகவும் 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் மேலும் 50 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் தியோ நீ சிங் தெரிவித்தார். இவ்வாண்டுக்கான நிதி தொடங்கப்பட்ட சுகாதார மருந்தகங்களில் கட்டுப்படுத்தப்பட்ட சுகாதார விற்பனைக்கும் டிஜிட்டல்மயமாக்குதலுக்கும் பயன்படுத்த எண்ணம் கொண்டிருப்பதாகவும் புதிய சிறு வணிகர்களுக்கும் நிதி வழங்கப்படும் என தொடர்பு அமைச்சின் துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *