மன்னிப்பு வேண்டாம்! SPRM அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும்!
- Thinagaren Sanggaren
- 17 Jul, 2025
ஜுலை 17,
SPRM விசாரணையின் போது 14 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்த Teoh Beng Hock குடும்பத்திடம் SPRM தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki மன்னிக்கேட்டிருப்பதை Teoh Beng Hock குடும்பத்தினர் மறுத்தனர். விசாரணையின் போது நடவடிக்கை அதிகாரிகளாக இருந்த SPRM அதிகாரிகள் ஒருவர் கூட இதுவரையும் விசாரிக்கப்படவில்லை, ஆனால் இப்போது மன்னிப்பு எனும் ஒரு வார்த்தையை மட்டும் Tan Sri Azam Baki கேட்பது எந்த வகையில் போதுமானதாக இருக்கும் என உயிரிழந்த Teoh Beng Hock குடும்பத்தினர் வலியுறுத்தினர். Teoh Beng Hock இறந்தது SPRM அலுவலகத்தில் SPRM அதிகாரிகளின் முன்னிலையில் என்பதை Teoh Beng Hock குடும்பத்தினர் நேற்று தலைநகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.
Teoh Beng Hock உயிரிழந்து 16 ஆண்டுகள் கடந்து விட்டாலும் இன்னும் எந்தவொரு விசாரணையும் சம்மந்தப்பட்ட SPRM அதிகாரிகளிடம் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும் Teoh Beng Hock குடும்பத்தினர் சுட்டிக்காட்டினர். இப்போது கேட்கப்படும் மன்னிப்பாலும் கொடுக்கப்படும் பணத்தாலும் எந்தவொரு நன்மையும் இல்லை என்றும் மாறாக எங்களுக்கு மன்னிப்போ, பணமோ வேண்டாம் எங்களுக்கு வேண்டியது விசாரணையும் நீதியும் என Teoh Beng Hock குடும்பத்தினர் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



