கூலாய் இந்தியர்களுக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கும் கோயில்களுக்கும் TEO NIE CHING நிதியுதவிகள்!
- Thinagaren Sanggaren
- 11 Nov, 2025
நவம்பர் 11,
கூலாயில் உள்ள தமிழ்ப்பள்ளிகளும் இந்தியர்களுக்கும் வழங்கப்படும் உதவி நிதிகள் முழுமையாகப் பயனளிக்கும் வகையில் இருப்பதாகத் துணை அமைச்சரும் கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான TEO NIE CHING தெரிவித்தார். நேற்று கூலாயில் உள்ள 30 இந்தியக் குடும்பங்களுக்கு உதவிப் பொருள்கள் வழங்கப்பட்ட நிலையில் இதுவரையில் RM32,600 ரிங்கிட் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டதாகவும் கடந்த 2024 ஆம் ஆண்டு RM27,583 ரிங்கிட் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டதாகவும் துணை அமைச்சரும் கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான TEO NIE CHING தெரிவித்தார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு கூலாயில் உள்ள கோயில்களுக்கும்
இந்தியப் பொது இயக்கங்களுக்கும் RM59,000 ரிங்கிட் மதிப்பிலான
உதவிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில் இந்த 2024 ஆம் ஆண்டு RM85,000 ரிங்கிட் மதிப்பிலான நிதி வழங்கப்பட்டிருப்பதாகத்
துணை அமைச்சரும் கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான
TEO NIE CHING தெரிவித்தார். கூலாயில் உள்ள 3 வெவ்வேறு
தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமானங்களைத் தனிப்பட்ட முறையில் தாம் நிர்வகிப்பதாகவும் வகுப்பறை
உறுமாற்றங்கள், பள்ளித் தளவாடப் பொருள்கள் ஆகியவற்றுக்கு
RM118,490 ரிங்கிட் நிதி வழங்கப்பட்டிருப்பதாகவும்
வெளியிலிருந்து நிதி பெற வேண்டிய இக்கட்டான சூழலைத் தாம் உருவாக்கமாட்டேன் என்றும்
துணை அமைச்சரும் கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான
TEO NIE CHING தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



