இணைய பயன்பாட்டில் குழந்தைகளின் பாதுகாப்பு! துணை அமைச்சர் TEO NIE CHING அறிவுரை!

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 10,

இணைய பயன்பாட்டில் அதிகமான குழந்தைகள் பாதுகாப்பாக கையாளுவதைத் தகவல் தொடர்பு அமைச்சு மதிப்பாய்வு செய்யும் என அதன் துணை அமைச்சர் TEO NIE CHING உறுதியளித்தார். இது தொடர்பாகத் தகவல் தொடர்பு பல்லூடகப் பாதுகாப்பு ஆணையமான MCMC விரிவான ஆய்வுகளை  மேற்கொண்டு வருவதாகவும் பெரும்பாலானச் சிக்கல்களின் அடிப்படையில் தீர்வுகள் மேற்கொள்ளப்படும் என TEO NIE CHING தெரிவித்தார். ஓர் உள்ளடக்கம் சட்டவிரோதமானது என கண்டறியப்பட்டால், எந்தவொரு தனிநபர் அல்லது அதிகாரியாலும் புகார் அளிக்கப்பட்டால் அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

இணையத்தில் பரவியிருக்கும் வன்முறை, விளையாட்டுகள், குற்ற நடவடிக்கைகள், சூதாட்டம் போன்ற சமூகச்சீரழிவிற்கு வித்திடும்படியான உள்ளடக்கங்களைக் குழந்தைகள் பயன்படுத்தாமல் தவிர்க்க பெற்றோர்கள் முதற்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என துணை அமைச்சர் TEO NIE CHING பெற்றோர்களுக்குக் கோரிக்கை விடுத்தார். குழந்தைகளின் பாலியல் தொடர்பாக சமுக வளைத்தளங்களில் பகிர்வது உட்பட தீங்கு விளைவிக்கும் இணைய உள்ளடக்கத்தைத் தகவல் தொடர்பு பல்லூடகப் பாதுகாப்பு ஆணையமான MCMC தொடர்ந்து கண்காணிப்பதாக துணை அமைச்சர் TEO NIE CHING உறுதியளித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *