தாய்லாந்தின் உள் விவகாரங்களில் நான் தலையிடமாட்டேன்! அன்வார் விளக்கம்!
- Thinagaren Sanggaren
- 23 Nov, 2025
நவம்பர் 23,
தாய்லாந்தின் உள் விவகாரங்களில் தாம் தலையிடுவதாக வெளிவந்துள்ள குற்றச்சாட்டுகளைப் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim மறுத்தார். கம்போடியா தாய்லாந்து இடையிலான எல்லை பிரச்சனை ஆயுதப் போராட்டமாக மாறியதால் மட்டுமே ஆசியான் தலைவராகவும் அமேரிக்காவின் வழிகாட்டுதலுடன் தாம் போர் நிறுத்தத்திற்கான காரியங்களை மேற்கொண்டதாக Datuk Seri Anwar Ibrahim விளக்கமளித்தார். கம்போடியாவின் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது தாய்லாந்து என்பதால் அமேரிக்காவின் முதலீடுகள் மூலமாகத் தாய்லாந்தின் பொருளாதாரம் மீட்சிப் பெறும் என்கிற உன்னதமான நோக்கத்தில் மட்டுமே அமேரிக்காவின் முதலீடுகளைத் தாய்லாந்துக்கு வழங்கும்படியான ஒப்பந்தங்களில் தாம் பங்கேற்றதாக Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்.
தாய்லாந்தில் ஒரு சில மக்கள் எனக்கு எதிராகப் போராட்டம் நடத்துகிறார்கள். நானும் ஒரு போராட்டவாதி என்பதை நான் மறக்கவில்லை. அவர்களின் போராட்டத்தை நான் மதிக்கிறேன். என்னுடைய போராட்டத்தைப் புறகணித்த தலைவர்களைப் போல நான் நடந்து கொள்ளமாட்டேன். தாய்லாந்திலிருக்கும் மலேசிய தூதரகத்தின் முன் நடத்தப்பட்ட போராட்டம் குறித்து தாய்லாந்து அரசுடன் பேசியதாகவும் மலேசியத் தூதரகத்திற்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என தாம் வலியுறுத்தியதாக அன்வார் தெரிவித்தார். தற்போது JOHANNESBURGகில் நடைபெற்று வரும் G20 மாநாட்டில் இருப்பதால் மலேசிய திரும்பியது இது குறித்து தெளிவான விளக்கத்தை அளிப்பதாகப் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



