அன்வார் எங்களுக்குப் பிரதமர் இல்லை! எல்லை மீறாதீர்! அன்வாருக்குத் தாய்லாந்து எச்சரிக்கை!
- Thinagaren Sanggaren
- 23 Nov, 2025
நவம்பர் 23,
மலேசிய பிரதமர் அன்வர் மலேசியாவை மட்டும் பாதுகாத்தால் போது என்றும் தாய்லாந்தின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்றும் தாய்லாந்து நாட்டு மக்கள் தாய்லாந்தில் உள்ள மலேசியத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அன்வார் மலேசியாவுக்குத் தான் பிரதமர். எங்களுக்கு இல்லை என கோஷமிட்டு 200க்கும் மேற்பட்ட தாய்லாந்து மக்கள் தாய்லாந்தின் முன்னாள் செனட்டர் Kaewsan Atibodhi, red-shirt leader Jatuporn Prompan, வழக்கறிஞர் Nitithorn Lamlua ஆகியோரின் தலைமையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மலேசியா எங்களுக்கு எல்லை நாடு மட்டுமே. அதனால் எல்லை மீறி அன்வார் செயல்பட கூடாது என தாய்லாந்தின் முன்னாள் செனட்டர் Kaewsan Atibodhi எச்சரித்தார்.
கம்போடியா தாய்லாந்து விவகாரத்தில் அன்வார் கம்போடியாவுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தது மட்டுமல்லாது தாய்லாந்தை அமேரிக்காவுக்குத் தாரை வார்க்கும்படியான ஒப்பந்தத்திலும் மத்தியம்சம் செய்திருப்பதாக red-shirt அமைப்பின் தலைவர் Jatuporn Prompan குற்றம்சாட்டினார். கம்போடியாவின் Hun Sen 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் குடும்ப ஆட்சி நடத்தி வருகிறார். அப்படியான ஒருவருக்கு அன்வார் போன்றவர்கள் ஆதரவாகச் செயல்படுவதில் எந்தவொரு நியாயத்தையும் தாய்லாந்திற்கு தராது என்றும் தாய்லாந்தின் ஆட்சி விவகாரங்களில் அன்வார் தலையிட கூடாது என்றும் தாய்லாந்தின் முன்னாள் செனட்டர் Kaewsan Atibodhi வலியுறுத்தினார். கம்போடியா தாய்லாந்தின் மீது வெளிப்படையாகத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. தாய்லாந்தின் மற்றொரு அண்டை நாடான மலேசியா மறைமுகமாகத் தாக்குதலை நடத்துகிறது என தாய்லாந்தின் முன்னாள் செனட்டர் Kaewsan Atibodhi தெரிவித்தார்.,
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



