நாதகவில் இருந்து இயக்குநர் மு.களஞ்சியம் விலகல்: கருத்து வேறுபாடே காரணம்
- Surendran Sumdraraj
- 18 Jul, 2026
சென்னை, ஜூலை 18-
நாம் தமிழர் கட்சியில் (நாதக) இருந்து இயக்குநர் மு.களஞ்சியம் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அவர் கடிதம் எழுதி தனது விலகல் முடிவைத் தெரிவித்தார். கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் அண்மைக்கால அரசியல் செயல்பாடுகள் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது கடிதத்தில், கருத்து வேறுபாடுகளுடன் தொடர்ந்து ஒரே இயக்கத்தில் பயணிப்பது ஆரோக்கியமானதல்ல என்று தெரிவித்துள்ள மு.களஞ்சியம், இயக்கத்தின் செயல்பாடுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் மாற்று அரசியல் தலைவர்களை விமர்சிக்கும் அணுகுமுறை தனக்கு வருத்தம் அளித்ததாகக் கூறியுள்ளார். மேலும், சக கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் மீது வெறுப்பைத் தூண்டும் வகையிலான அரசியல் போக்கு ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இழிவான விமர்சனங்கள் தமிழ்த் தேசிய அரசியலின் பண்பாட்டிற்குப் பொருந்தாதவை என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



