கட்சித் தாவும் உறுப்பினர்களை மற்ற கட்சிகள் ஏற்கக்கூடாது! - ஜாஹிட் நினைவூட்டல்
- Shan Siva
- 16 Aug, 2025
ஷா ஆலம், ஆக 16: மற்ற உறுப்புக் கட்சிகளின் உறுப்பினர்களை ஏற்கக்
கூடாது என்ற கொள்கையை ஒற்றுமை அரசாங்கக் கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டும் என்று
அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி நினைவூட்டியுள்ளார்.
பாரிசான் நேஷனல்
தலைவருமான ஜாஹித், இது தொடர்பாக ஒரு எதிர்ப்புக் குறிப்பு
தயாரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
எதிர்ப்புக்
குறிப்பு அம்னோ உச்ச மன்றத்தின் முடிவு. ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் மற்ற
உறுப்புக் கட்சிகளின் உறுப்பினர்களை ஏற்கக் கூடாது என்று தாங்கள் நீண்ட காலமாகக்
கூறி வருகிறோம்.
இது மதிக்கப்பட
வேண்டும்; இது கூட்டணியில்
உள்ள ஒவ்வொரு கட்சியாலும் மதிக்கப்பட வேண்டிய ஒன்று என அவர் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



