வெற்றிகரமாக அறிமுகம் கண்டது 'திரையிசை கண்ட இலக்கியம் - நயம்பட உரைப்போம் 2026'

top-news
FREE WEBSITE AD


கிள்ளான், மே 2: மலர் டிவி ஏற்பாட்டில், ஓம்ஸ் அறவாரியத்தின் ஆதரவுடன் 'திரையிசை கண்ட இலக்கியம்' எனும் 'நயம்பட உரைப்போம்'  போட்டியின்

அறிமுக விழா மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கிள்ளான் தெங்கு கிள்ளானில்உள்ள ஈ லைப்ரரி அரங்கில் பிற்பகல் 2 மணி தொடங்கிவெகு சிறப்பாக நடைபெற்றது,

ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில் செந்தோசா  சட்டமன்ற உறுப்பினர் வை. பி குணராஜ், மலாயாப் பல்கலைக்கழக  இந்திய ஆய்வியல் துறைத் தலைவர் முனைவர் ரவீந்திரன் மாரய்யா, கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினர் தங்கராஜ், டத்தோ கோபால கிருஷ்ணன் உடபட பல முக்கிய பிர்முகர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியை மலர் டிவி மேலாளர் தினகரன் வழிநடத்தினார். மலர் டிவி குறித்த விளக்கத்தை திரைப் பின்னணியில் அவர் விளக்கினார்.
 
ஓம்ஸ் பா தியாகராஜன் தலைமையுரை ஆற்றியதோடு, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் வைபி  குணராஜோடு இணைந்து 'திரையிசை கண்ட  இலக்கியம் நயம்பட உரைப்போம் 2026' அறிமுகநிகழ்வை அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார்.

நிகழ்வில் போட்டியில் பங்கேற்பவர்களுக்கான, மாதிரி விளக்கத்தை விரிவுரையளர் முனைவர் பழனி விளக்கினார். நிறைவாகப் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.  

ஓம்ஸ் பா.தியாகராஜன்,  வைபி குணராஜ்,  சிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் அமைப்பாளர் க.முருகன், மலர் டிவி மேலாளர் தினகரன், விரிவுரையாளர் பழனி ஆகியோர் பங்கேற்று ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.

தமிழ்த் திரையிசைப் பாடல்களில் சங்க இலக்கியச் செய்யுளைப் பயன்படுத்தியிருக்கும் பாடல்களை அடையாளம் கண்டு, அதனை விளக்கத்தோடு நயம்பட உரைப்போருக்கு 5000 ரிங்கிட் முதல் பரிசு மற்றும் தங்கப்பதக்கங்களையும் இப்போட்டிக்காக ஓம்ஸ் அறவாரியம் வழங்குகிறது,

மேலும் 10 போட்டியாளர்களுக்கு அதிரடியான பரிசுத் தொகையும் காத்திருக்கிறது. 18 முதல் 25 வயதினர் பிரிவு ஒன்றிலும், 26 வயதுக்கு மேல் பிரிவு இரண்டிலும் பங்கேற்கலாம். 

இப்போட்டியில் பங்கேற்க கீழ்க்கண்ட  QR குறியீட்டை ஸ்கேன் செய்யுங்கள். அல்லது என்ற 012 2443010  எண்களுக்கு அழைக்கலாம். பங்கேற்பாளருக்கான கட்டணம் 50 ரிங்கிட் என்பது குறிப்பிடத்தக்கது.


மே 25 பதிவுக்கான இறுதி நாள்.

மேல் விவரங்கள் மற்றும் இந்த நிகழ்வு குறித்த விரிவான செய்தி  அடுத்தடுத்து உங்கள் மலர் டிவியிலும், இணையதளத்திலும் இடம்பெறும்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *