ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்படும் 3 பழமையான சிலைகள்

top-news
FREE WEBSITE AD

சென்னை, ஜூலை 10-

தமிழகக் கோவில்களில் இருந்து திருடப்பட்டு வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட பழமையான 3 சிலைகள் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டு தமிழகத்துக்குக் கொண்டு வரப்பட உள்ளன.

தமிழக கோவில்களில் இருந்து கடத்தப்பட்ட மொத்தம் 6 பழமையான சிலைகளை மீட்டு தமிழகத்துக்குக் கொண்டுவர, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அவற்றில் 3 சிலைகள் ஆஸ்திரேலியாவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அந்த சிலைகளை இந்தியாவுக்குத் திருப்பி ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

மீட்கப்படும் சிலைகளில் ஒன்று, திருவாரூர் மாவட்டம் கடுவன்குடி கிராமத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலைச் சேர்ந்த திரிசூலபத்திரகாளி அம்மன் சிலையாகும்.

மற்றொரு சிலை நந்தி சிலை என்றும், அதுவும் அதே கோவிலுக்குச் சொந்தமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது சிலை, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மானம்பாடி கிராமத்தில் உள்ள நாகநாதசாமி கோவிலுக்குச் சொந்தமான ஆறு தலைகள் கொண்ட சுப்பிரமணிய சாமி சிலையாகும்.

ஆஸ்திரேலிய அரசு, அந்நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் Narendra Modi-யிடம் இந்த 3 சிலைகளையும் ஒப்படைக்க உள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *