RAFIZI மீது எந்தவொரு கோபமும் இல்லை! – Saifuddin!
- Sangeetha K Loganathan
- 09 Jul, 2025
ஜூலை 9,
பிதரமர் Datuk Seri Anwar Ibrahim மீது Datuk Seri Rafizi Ramli முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளால் அவர் மீது பி.கே.ஆர் தலைமை கோபமாக இருப்பதாக வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லை என உள்துறை அமைச்சரும் பி.கே.ஆர் தேர்தல் தொடர்புக் குழுத் தலைவருமான Datuk Seri Saifuddin Nasution Ismail விளக்கமளித்தார். தலைமை நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் கட்சிகளின் தலையீடு இருப்பதாக முன்னாள் பொருளாதார அமைச்சரும் பி.கே.ஆரின் முன்னாள் துணைத் தலைவருமான Datuk Seri Rafizi Ramli குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பி.கே.ஆர் கட்சிக்கு எதிராக அவர் செயல்படுகிறார் என கருதப்படாது என Datuk Seri Saifuddin Nasution Ismail விளக்கமளித்தார்.
பி.கே.ஆர் கட்சி எந்தவொரு வெளிப்படையான கருத்துகளையும் ஏற்பதாகவும் கருத்து முரண்களால் ஆளுமைமிக்க தலைவர்களைப் பி.கே.ஆர் கட்சி இழக்க விரும்பாது என்றும் அரசியல் கட்சி மீதான Datuk Seri Rafizi Ramli முன் வைத்திருக்கும் சந்தேகம் நியாயமானதாக இருப்பதால் அதனைக் கட்சி பரிசீலிப்பதாகவும் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார். மேலும் அவர் முன் வைத்திருக்கும் குற்றச்சாட்டு தொடர்பாக பி.கே.ஆர் கட்சியின் தலைமைக்குப் பாதிப்பு இல்லை என்பதையும் Datuk Seri Saifuddin Nasution Ismail தெளிவுப்படுத்தினார்.
Menteri Dalam Negeri merangkap Pengerusi Biro Pilihan Raya PKR, Datuk Seri Saifuddin Nasution Ismail menjelaskan tiada rasa marah terhadap Rafizi Ramli berhubung dakwaan campur tangan politik dalam pelantikan ketua hakim. PKR menganggap Rafizi tetap dalam landasan parti.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



