17 பணமோசடி குற்றச்சாட்டுகளிலிருந்து ரோஸ்மா விடுதலை – அரசு வழக்கறிஞர் துறை மேல்முறையீடு செய்யப்போவதில்லை

top-news

கோலாலம்பூர், டிச. 12-

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் மீதான 17 பணமோசடி ,பயன்பாட்டுக் குற்றச்சாட்டுகளில் அவரை விடுதலை செய்த உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று அரசு வழக்கறிஞர் துறை (AGC) இறுதியாக முடிவு செய்துள்ளது.

2025 அக்டோபர் 30-ஆம் தேதி உயர்நீதிமன்றத்திடமிருந்து மேல்முறையீட்டு ஆவணங்களைப் பெற்ற பின்னர், நீதிமன்றத்தின் முழு எழுத்து மூலத் தீர்ப்பையும் ஆழமாக ஆராய்ந்ததாகவும், மேல்முறையீட்டில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று உறுதியான முடிவுக்கு வந்ததாகவும் AGC தெரிவித்தது.

“குற்றவியல் வழக்குகளில் தேவைப்படும் குற்றத்தை நிரூபிக்கும் அளவுக்கு ஆதாரங்கள் இல்லை என்பதால் மேல்முறையீடு தோல்வியடையும் என்று நாங்கள் மதிப்பிட்டுள்ளோம்,” என்று அரசு வழக்கறிஞர் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், ரோஸ்மா மன்சோர் மீதான அனைத்து 17 குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர் முழுமையாக விடுதலை செய்யப்பட்டதாக இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நாட்டின் கவனத்தை ஈர்த்து வந்த நிலையில், தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *