பாரிசானில் துரோகிகளுக்கு இடமில்லை! - Zahid Hamidi நினைவூட்டல்!

top-news

ஜூன் 26,


2018 தேர்தலுக்குப் பின் அம்னோ துரோகிகளை அடையாளம் கண்டு அவர்களைக் கட்சியிலிருந்து நீக்கியதாக அம்னோ தலைவரும் துணைப் பிரதமருமான Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார். 2018 தேர்தல் முடிவுக்குப் பின்னர் அம்னோவின் பல தொகுதித் தலைவர்கள் கட்சித் தாவலில் ஈடுபட்டதாகவும் 2022 பொதுத்தேர்தலுக்குப் பின்னர் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாரிசான் தலைமையின் ஒப்புதலில்லாமல் ஆட்சி அமைக்க பெரிக்காத்தானுக்கு ஆதரவளித்ததாகவும் அவர்களைப் பாரிசான் தலைமை கண்டித்ததாகவும் Datuk Seri Ahmad Zahid Hamidi நினைவூட்டினார்.

ஆனால் இப்போது அதே நிலைமையில் பாரிசான் இல்லை. யார் அந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பதைப் பாரிசான இன்று வரையும் வெளியிடவில்லை. அவர்களின் அரசியல் வாழ்வில் இது பெரும் கரும்புள்ளியாக்கப்படும் என Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார். அந்த நிலைமையைப் பாரிசான் தலைமை சமாளித்து இப்போது ஒற்றுமை கூட்டணியை உருவாக்கினாலும் மீண்டும் அது போன்ற துரோகத்தைப் பாரிசான் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நினைத்துக் கூட பார்க்க கூடாது என Datuk Seri Ahmad Zahid Hamidi வலியுறுத்தினார். யாரந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனும் கேள்வியைச் செய்தியாளர்கள் கேட்டபோது அதே துரோகத்தை மீண்டும் அவர்கள் செய்ய நினைத்தால் யார் அவர்கள் என்பதை வெளியிடுவதாக Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார்.


Zahid Hamidi menegaskan tiada ruang dalam Barisan Nasional untuk pengkhianat parti. Beliau mengingatkan bahawa ahli Parlimen yang menyokong Perikatan tanpa restu parti pada 2022 akan dikenang sebagai pengkhianat jika mengulangi kesilapan sama

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *