3 மோட்டார் சைக்கிள்கள் விபத்து! ஒருவர் பலி! இருவர் படுகாயம்!

top-news

ஜூன் 7,


கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் எதிரில் வந்த இரு மோட்டார் சைக்கிள்களை மோதி விபத்துக்குள்ளானதில் 25 வயது இளைஞர் பலியானதுடன் 18 வயது 19 வயது இளைஞர்கள் இருவர் படுகாயம் அடைந்தனர். செறி மெனான்தியிலிருந்து Kayu Ara Pasong செல்லும் சாலையில் அதிகாலை 4.30 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டதாக Pontian மாவட்டக் காவல் ஆணையர் Abdul Hamid Abdul Rahman தெரிவித்தார். 

விபத்துக்குக் காரணமான 25 வயது இளைஞர் Mohammad Idham Khair என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவரின் உடல் பிரேதப்பரிசோதனைக்காக Pontian மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் விபத்தில் படுகாயம் அடைந்த 18 வயது 19 வயது இளைஞர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சிகிச்சைக்குப் பின்னர் விசாரணையை மேற்கொள்வதாக Pontian மாவட்டக் காவல் ஆணையர் Abdul Hamid Abdul Rahman தெரிவித்தார்.

Seorang pemuda maut manakala dua remaja cedera selepas tiga motosikal bertembung di jalan Serimananti–Kayu Ara Pasong, Pontian. Kemalangan berlaku apabila motosikal mangsa hilang kawalan dan merempuh dua motosikal lain dari arah bertentangan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *