மலாக்காவில் கொள்ளையர்கள் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்
- Tamil Malar (Reporter)
- 24 Nov, 2025
செய்தி - வெற்றி மைந்தன்
மலாக்கா, நவ, 24-
காவல் படையால் தேடப்படும் மூன்று கொள்ளையர்கள், போலீஸ் அதிகாரிகளைத் தாக்கியதால் தங்கள் உயிரை இழந்தனர். டுரியான் துங்கால் பகுதியில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில் அதிகாலை சுமார் 4 மணிக்கு நடைபெற்ற நடவடிக்கையின் போது, இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
மாநில போலீஸ் தலைவர் டத்தோ சுல்கய்ரி முக்தார் கூறுகையில், "ஓப்ஸ் காசா மலாக்கா" என்ற சிறப்பு செயல்பாட்டின் கீழ், போலீஸ் குழு இந்த மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்ய முயன்றபோது, அவர்கள் பாராங்கத்தி கொண்டு ஒரு கார்ப்பரலைத் தாக்கினர் என்றார். 24 வயது, 29 வயது கொண்ட மூன்று பேர் அடங்கிய, "கேங் டிதி" என்று அழைக்கப்படும் இந்தக் குழு, வீடுகள், கார் பழுதுபார்க்கும் கடை, உணவகங்களில் சுமார் 20 கொள்ளைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகின்றனர்.
தாக்கப்பட்ட போலீஸ் அதிகாரியின் இடது கையில் கடுமையான காயம் ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. "இது சுயபாதுகாப்புக்காக நடத்தப்பட்ட சுட்டுக் கொலை" என்றுசுல்கய்ரி விளக்கினார். மூன்று சந்தேக நபர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் மலாக்காவில் அதிகரித்து வரும் கொள்ளை சம்பவங்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கையின் வலிமையை வெளிப்படுத்துகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



