சீ விளையாட்டுப் போட்டி: மூன்று நீச்சல் வீரர்கள் இறுதிப் போட்டிக்குத் தேர்வு

top-news

கோலாலம்பூர், டிச. 11-

பாங்காக்கில் நடைபெற்று வரும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் (SEA Games) மலேசிய நீச்சல் அணி இன்று அபார வெற்றி பெற்றது. மூன்று வீரர்களும் தகுதி சுற்றை வெற்றிகரமாக கடந்து இன்றிரவு நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

முதலில், பெண்களுக்கான 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் போட்டியில் சோங் ஷின் லின் 29.61 விநாடிகளில் ஏழாவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். இப்போட்டியை பிலிப்பைன்ஸின் கைலா நோயல் சான்செஸ் (28.47 வி) முதலிடத்திலும், இந்தோனேசியாவின் மஸ்னியாரி வுல்ப் (29.20 வி) இரண்டாம் இடத்திலும், தாய்லாந்தின் சாவனீ பூன்அம்பாய் (29.28 வி) மூன்றாம் இடத்திலும் முடித்தனர்.

அடுத்து ஆடவர் 50 மீட்டர் பிரீஸ்டைல் போட்டியில் யூ ஜிங் டோங் 22.92 விநாடிகளில் மூன்றாவது இடம் பிடித்து இறுதிச் சுற்றுக்குத் தேர்வானார். அதேபோல், ஆண்ட்ரூ கோவும் தனது தகுதிச் சுற்றில் சிறப்பாக நீந்தி மலேசியாவுக்கு மூன்றாவது இறுதிப் போட்டி இடத்தை உறுதி செய்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *