பினாங்கு பெட்ரோல் நிலையங்களில் கேபிடிஎன் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கை!

top-news
FREE WEBSITE AD

பட்டர்வொர்த், அக். 2-

நேற்று தொடங்கி, பூடி95 திட்டத்தின் அமலாக்கம் சீராக இருப்பதை உறுதிசெய்ய, பினாங்கு முழுவதிலும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பினாங்கு மாநிலத்தின் உள்நாட்டு வாணிப, வாழ்க்கைச் செலவின அமைச்சு, கேபிடிஎன் கடுமையான கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

வழிகாட்டுதல்களின்படி பூடி95 திட்டம் செயல்படுவதையும். உதவித்தொகை மோசடி அல்லது தவறாகப் பயன்படுத்துவது நிறுத்தப்படுவதையும் உறுதிசெய்ய கண்காணிப்பு நடவடிக்கைகள் அவசியம் என்று மாநில கேபிடிஎன் இயக்குநர் எஸ். ஜெகன் தெரிவித்தார்.ரோன்95 பெட்ரோல் உதவித்தொகை, தகுதியுள்ள மலேசியர்களுக்கு சரியாக சென்றடைவதை உறுதி செய்வதற்காக பூடி 95 திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அமலாக்கம் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட உதவித்தொகை பெட்ரோல் கட்டுப்பாட்டு அமைப்பு, எஸ்.கே.பி.எஸ். பூடி95 மூலம் அனைத்து கொள்முதல். விற்பனை பரிவர்த்தனைகளும் இலக்கவியல் முறையில் பதிவு செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார். மேலும், கசிவு அபாயத்தைத் தவிர்க்க பெட்ரோல் நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கை முக்கியமானது என்று ஜெகன் கூறினார்.

இதுவரை பினாங்கில் உள்ள 15 பெட்ரோல் நிலையங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளதோடு, பரிவர்த்தனைகள் தடையின்றி சுமுகமாக மேற்கொள்ளப்படுவதை ஜெகன் சுட்டிக்காட்டினார். அனைத்து பயனீட்டாளர்களையும் பார்க்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். உங்களுக்குப் புரியவில்லை என்றால், பெட்ரோல் நிலைய நிர்வாகத்திடம் உதவி கேட்கவும்.

முதல் முறை இது சற்று குழப்பமாக இருக்கலாம். ஆனால், நீங்கள் முதல் முறை அதைச் செய்தவுடன், இது மிகவும் எளிமையானது. எனவே, திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும். அது மிகவும் தெளிவாக இருக்கும், என்றார் அவர். முன்னதாக, தெற்கு நோக்கி செல்லும் வழியில் உள்ள சுங்கை டுவா பெட்ரோனாஸ் நிலையத்தில், சோதனை நடவடிக்கையை மேற்கொண்டப் பின்னர் ஜெகன் செய்தியாளர்களிடம் பேசினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *