பள்ளி மாணவி கத்திக்குத்து! 15 வயது மாணவன் கைது! பள்ளியில் பரபரப்பு!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 6,

பந்திங் இடைநிலைப்பள்ளியில் மாணவன் ஒருவன் மாணவியைக் கத்தியால் குத்தியதில் 15 வயது மாணவி ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டு ம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று காலை பந்திங் இடைநிலைப்பள்ளிக்கு வந்த அந்த மாணவன் பள்ளி வளாகத்திலிருந்த பெண் மாணவியைக் கத்தியால் குத்தியதாகவும் பள்ளி ஆசிரியர்கள் சம்மந்தப்பட்ட மாணவனை மடக்கி பிடித்ததாகவும் கோலா லங்காட் மாவட்டக் காவல் ஆணையர் Akmalrizal Radzi தெரிவித்தார். 
 
கைது செய்யப்பட்ட மாணவன் கடந்த 2 மாதங்களாகப் பள்ளிக்கு வராமல் மட்டம் போட்டதாகவும் இதனால் அம்மாணவனின் மீது பள்ளி நிர்வாகம் கடந்த மாதம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது. இன்று காலை 15 வயது மாணவன் கருப்பு நிற உடையில் பள்ளி வளாகத்தில் நுழைந்து பாதிக்கப்பட்ட மாணவியிடம் சகஜமாகப் பேசிக்கொண்டிருந்த போது திடீரென கத்தியால் 15 வயது மாணவியைக் குத்தியதாகச் சம்பவத்தை நேரில் பார்த்த மாணவர்கள் சமூகவலைத்தலங்களில் பதிவிட்டுள்ளனர். 
 
சந்தேக நபரான 15 வயது மாணவனைக் காவல்துறை கைது செய்திருப்பதாகவும் பாதிக்கப்பட்ட 15 வயது மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தற்போது சீராக இருப்பதாகவும் கோலா லங்காட் மாவட்டக் காவல் ஆணையர் Akmalrizal Radzi தெரிவித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *