ஸாஹிட் விடுதலை – ‘விருப்பப்படி எடுக்கப்பட்ட முடிவு அல்ல’ என அரசுத் தரப்பு விளக்கம்

top-news

கோலாலம்பூர், ஜன 12: துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அக்மத் ஸாஹிட்  ஹமிடி மீதான 47 ஊழல் குற்றச்சாட்டுகளில், மேலதிக நடவடிக்கை இல்லை (NFA) என்ற முடிவு, விருப்பப்படி எடுக்கப்படவில்லை என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் தான் ஸ்ரீ முகமட் டுசுக்கி  முக்தார் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு  வழக்கை மீளாய்வு செய்வதற்கான தீர்மானம், பாதுகாப்பு தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த பிரதிநிதித்துவத்தில் எழுந்த உண்மைச் சூழல்கள்சட்ட அம்சங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக அவர் விளக்கினார். அவற்றின் அடிப்படையில் வழக்கை மீண்டும் பரிசீலிக்க அரசுத் தரப்பு முடிவு செய்ததாகவும் கூறினார்.

மேலும், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) மேற்கொண்ட கூடுதல் விசாரணைகளின் முடிவுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். அந்த விசாரணைகளில், வழக்கைத் தொடர்ந்து நடத்தத் தேவையில்லை என்ற முடிவு எட்டப்பட்டதாகவும் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *