எம்.டி.யு.சி.க்குத் தற்காலிக முடக்க உத்தரவு: சட்டப்படி நடவடிக்கை – பதிவுத்துறை விளக்கம்
- Surendran Sumdraraj
- 08 May, 2026
கோலாலம்பூர், மே 8-
மலேசிய தொழிற்சங்க காங்கிரஸான எம்.டி.யு.சி. (MTUC) மீது பிறப்பிக்கப்பட்ட தற்காலிக கலைப்பு உத்தரவு, 1966ஆம் ஆண்டின் சங்கச் சட்டம் பிரிவு 14(5)-ன் கீழ் முழுமையாக சட்டப்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும் என்று மலேசிய சங்கப் பதிவுத்துறை (RoS) விளக்கம் அளித்துள்ளது.
RoS வெளியிட்ட அறிக்கையில், முன்னதாக வழங்கப்பட்ட எழுத்து மூல உத்தரவுகளைத் தொடர்ந்து பின்பற்றத் தவறியதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி வழங்கப்பட்ட உத்தரவின் படி, 2020 முதல் 2025 வரையிலான காலத்திற்கான கணக்காய்வு செய்யப்பட்ட நிதி அறிக்கைகள், வரவு-செலவு கணக்குகள் மற்றும் வெளிநாட்டு நிதி அல்லது சொத்து தொடர்பான தகவல்களை எம்.டி.யு.சி. சமர்ப்பிக்கத் தவறியதாக RoS தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



