ஊடகவியலாளர்கள் மீது தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கக்கூடாது – பிரதமர்
- Surendran Sumdraraj
- 07 Jul, 2026
கோலாலம்பூர், ஜூலை 7 –
பதிவு செய்யப்பட்ட எந்தவொரு ஊடகவியலாளர் அல்லது ஊடக நிறுவனத்தின் மீதும் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
அவர் கூறுகையில், இதுபோன்ற விவகாரங்களில் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்பு, அது முதலில் மலேசிய ஊடக மன்றத்துக்கு (Malaysia Media Council - MMM) பரிந்துரைக்கப்பட வேண்டும் என்றார்.
பிரதமரும், நிதி அமைச்சருமான அன்வார், இந்த நடைமுறை ஊடகவியலாளர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட ஊடக நிறுவனங்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் நியாயமான, வெளிப்படையான மற்றும் சுதந்திரமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், உரிய ஆய்வு மற்றும் பரிசீலனை இன்றி எந்தவொரு ஊடகவியலாளரையோ அல்லது பதிவு செய்யப்பட்ட ஊடக நிறுவனத்தையோ விசாரணை அல்லது வழக்குத் தொடரும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பதற்கும் இந்த நடைமுறை உதவும் என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



