நான் குடிகாரனா? பெர்சத்துவின் கண்டனத்திற்கு அமைச்சர் பதிலடி!
- Thinagaren Sanggaren
- 05 Oct, 2025
அக்தோபர் 5,
அரசு நிகழ்ச்சிகளில் மதுபானம் பயன்படுத்த கூடாது என்பதைத் தாமும் அறிந்திருப்பதாகச் சுற்றுலா கலை கலாச்சார அமைச்சர் Tiong King Sing பதிலளித்தார். முன்னதாக அரசு நிகழ்ச்சிகளில் முக்கியமாக எனது அமைச்சு நடத்தும் நிகழ்ச்சிகளில் மதுபானங்கள் வழங்கப்படுவதாகப் பெர்சத்துவின் Masjid Tanah நாடாளுமன்ற உறுப்பினர் Mas Ermieyati Samsudin ஆதாரமற்றக் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளதாக அமைச்சர் Tiong King Sing தெரிவித்தார். நான் என்ன குடிகாரனா? எனக்கு தெரியாதா? என மாஸ் எரிமியாத்திக்குக் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.
என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையும் அமைச்சர் பொறுப்பிற்குமான வேறுபாட்டை உணர்ந்து தாம் செயல்படுவதாக அமைச்சர் Tiong King Sing தெரிவித்தார். சுற்றுலா கலை கலாச்சார அமைச்சு நடத்திய எந்தவோர் அரசு நிகழ்ச்சிகளிலும் மதுபானங்கள் விருந்தினர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதை Tiong King Sing உறுதிப்படுத்தினார். சுற்றுலாத் துறை பல்வேறு அரசு சாரா நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து செயல்படுகிறது. அப்படியான அரசு சாரா நிகழ்ச்சிகளில் மதுபானங்கள் பயன்படுத்தப்படுவதற்கும் அமைச்சிற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என Tiong King Sing விளக்கமளித்தார். நான் தனியார் நிகழ்ச்சிகளிலும் குடும்ப நிகழ்ச்சிகளிலும் மது அருந்துவது என்பது எந்த வகையிலும் அமைச்சில் செயல்பாடுகளைப் பாதிக்காது என்றும் அரசு நிகழ்ச்சிகளில் மதுபானங்கள் வழங்கப்பட்டதில்லை என்றும் Tiong King Sing விளக்கமளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



